Sunday 28 July 2013

கலைத்தந்தை" கரு.முத்து.தியாகராசச் செட்டியார் (16.06.1893 - 29.07.1974)

"ஆத்திக்காடு தெக்கூரில் கருங்குளத்தார் வீடு எனப் புகழ் பெற்ற குடும்பத்தில் முத்துக்கருப்பன் செட்டியார் -
வினைதீர்த்தாள் ஆச்சியின் பத்தாவது மகனாகத் தோன்றினார்.இவர் இளமையில் இலங்கையில் கல்வி பயின்று வர,
அங்கேயே "Morning Leader" என்னும் ஆங்கில இதழில் செய்தியாளராகவும், பின்னர் துணை ஆசிரியராகவும்
பணியாற்றியவர். தமிழகம் வந்த பிறகு குஜராத்தைச் சேர்ந்த கல்யாணம் ராம்ஜி என்பவரோடு இணைந்து மதுரையில்
மீனாட்சி ஆலையைத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பின் மதுரையில் தங்க விரும்பாத ராம்ஜி, ஆலையின்
முழுப்பொறுப்பையும் தியாகராசரிடம் ஒப்படைத்துவிட்டு, 1921-ல் குஜராத்திற்கு சென்றுவிட்டார். அதன் பிறகு இந்த
ஆலையை வளர்த்ததோடு தமிழகமெங்கும் பல்வேறு ஆலைகளைத் தொடங்கி ஒரு கட்டத்தில் 16 ஆலைகளை
நிர்வாகித்து, "ஆலை அரசர்"என அழைக்கப்பட்டார்.

தொடக்கத்தைல் தமது ஊரில் தம் வாழ்க்கைத் துணைவியாரின் பெயரில் "டஸ்ரீ விசாலாட்சி கலாசாலை" என்
னும் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கினார். தொடர்ந்து தியாகராசர் உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிக்
கல்லூரி, பொறியியர் கல்லூரி, என்று கல்வி நிறுவனங்களை மதுரையிலும், பல்தொழில் பயிற்சிக் கல்லூரி ஒன்றை
சேலத்திலும் தொடங்கினார். இவ்வாறு தியாகராசர் தொடங்கிய கல்வி நிறுவானங்களின் மொத்த எண்ணிக்கை20
ஆகும். இவர் கல்வி நிறுவனங்களுக்காக கொடுத்த நன்கொடையின் மதிப்பு ஏறத்தாழ 3கோடியாகும்.

இவரது வாழ்நாளின் மற்றொரு சிறந்த பணி "தமிழ்நாடு" நாளிதழைத் தொடங்கிப் பல ஆண்டுகள் தரமாகவும்,
தமிழ்ப் பற்றோடு நடத்தியமையாகும்."கலைத் தந்தை" எனப் பட்டம் பெற்ற தியாகராசர் அப்பட்டத்திற்குப்
பொருத்த்மானவர் என்பதை அவரது கட்டிடங்களே உணர்த்தும். ஆலை, வளமனை, கல்லூரி எனக் கட்டிடம்
எதுவாயினும் அவர் கட்டிய கட்டிடமாக இருந்தால் பார்த்தவர்கள், பார்த்தவுடன் இது தியாகராசர் கட்டியது! எனச்
சொல்லக்கூடிய சிறப்புடன் கலைநயம் மிக்க தியாகராசர் முத்திரையைக் காட்டி நிற்கும்.

தமது கல்விப் பணியாலும், தமிழ் ஆர்வத்தாலும் இதழியல் தொண்டுகளாலும் தமிழக வரலாற்றில் தனித்தடம்
பதித்தவர் கலைத்தந்தை.இவரது மகன்கள் இருவர். மூத்தவர் கரு.முத்து.தி.சுந்தரம் செட்டியார். இவர் தந்தையின்
தொழில்களைத் தொடர்ந்து கவனித்து வந்தார். இவரது மகன் சு.சொக்கலிங்கம் செட்டியார். இவர் தம் ஐயாவைப்
போலவே ஆலை நிர்வாகத்தில் தனிச் சிறப்புடையவராக விளங்குகிறார். இவர் அறப்பணிச் செல்வராகவும்
விளங்குகிறார்.

கலைத்தந்தையின் இரண்டாவது மகன் கரு,முத்து.தி.மாணிக்கவாசகம் செட்டியார். இவர் தமிழ்நாடு இதழின்
நிர்வாகப் பொறுப்பை திறம்பட நடத்தியவர். இலக்கிய திறனாய்வு நூல்கள் பல எழுதியுள்ளார். இவரது மகன்
கே.எம்,தியாகராஜன். இவர் தன் ஐயா தோற்றுவித்த மதுரை வங்கியினுடைய தலைவராக இப்பொழுது பணியாற்றிக்
கொண்டிருக்கிறார். கலைத் தந்தையின் இரண்டாவது மனைவி டாக்டர்.இராதா தியாகராசன்,
we proud to say that we are his relatives 
தமிழ் இலக்கியத்தில்
ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற இவர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராகப்
பொறுப்பேற்று,அப்பல்கலைக் கழகத்தின் செம்மையான வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
இவருக்கும் கலைத் தந்தைக்கும் பிறந்த மகன் கருமுத்து.தி.கண்ணன். கலைத் தந்தையின் கல்வி நிறுவனங்கள்
பல இன்று இவராலயே நிருவாகிக்கப்படுகிறது. இன்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின்
அறங்காவலர் குழுத் தலைவராகச் செவ்வனே பணியாற்றி வருகின்றார்.


2 comments:

  1. சாதனை யாளர் கருமுத்து தியாகராசர் தலைப்பு நூல் நூல் நிலையம் அனைத்தும் கிடைக்கும்.படியுங்கள்.நாட்டுடைமை ஆக்கப்பட்ட எழுத்து.

    ReplyDelete