நமது நகரத்தார்
திருமணங்களில் சாமான் பரப்புவது என்பது
சம்பிரதாயம் மட்டுமல்ல .ஒரு கலையாகவும் இருக்கும் .அடுக்கி வைக்கபட்டிருக்கும் .
சாமான்களைக் பற்றி ஒரு பவாக்கம் இதோ
பொங்கலிடும்
உருளியுடன் , விளகுச்சட்டி
புதுவிதத்தில்
அன்னமுள்ள சரவி ளக்கு
மங்கலத்தைத்
தரும்மாட விளக்கு ,கூசா
மணக்கவைக்கும்
டிக்காசப் போணி மூன்று
தங்கநிறம்
போல்தாயும் முடிச் சட்டி
தாமிரத்தில்
மிகப்பெரிய தண்ணி அண்டா
சிங்கரா
மாப்பிள்ளைக்கு சோறே டுக்க
தெளிவான டிபன்பாக்ஸ்ம் , சேர்த்து வைத்தார்
முக்காலி , தீவட்டி,
அண்டா தட்டு
முளைப்பாரி ,சருவங்கள் எட்டு , மேலும்
எக்காலும்
தண்ணீரைத் தூக்கி வந்து
இயல்பாக
வைத்திருக்க குடங்கள் பத்து
தக்காளிப்
பழநிறத்துப் பெண்ணுக் காக
தங்கம்போல்
மின்னலிட வெங்கலத்தில்
சொக்கவைக்கும் சாமான்கள் நிறையச் சேர்த்தார் !
தொழிலகம் போல்
வீட்டிற்குள் அடுக்கிவைத்தார் !
No comments:
Post a Comment