Saturday, 24 August 2013

அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை !!!!





சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.

தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.

தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.

ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார். நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.

மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.

நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர். திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள், ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.

கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன். அக்கவிதை இதோ,

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

கவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி, ‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து மணம் வீசியது.

Thursday, 22 August 2013

சாமான் பரப்புதல்

நமது நகரத்தார் திருமணங்களில்  சாமான் பரப்புவது என்பது சம்பிரதாயம் மட்டுமல்ல .ஒரு கலையாகவும் இருக்கும் .அடுக்கி வைக்கபட்டிருக்கும் . சாமான்களைக் பற்றி ஒரு  பவாக்கம் இதோ

பொங்கலிடும் உருளியுடன் விளகுச்சட்டி
புதுவிதத்தில் அன்னமுள்ள சரவி  ளக்கு
மங்கலத்தைத் தரும்மாட விளக்கு ,கூசா
மணக்கவைக்கும் டிக்காசப்  போணி மூன்று
  தங்கநிறம்  போல்தாயும்  முடிச் சட்டி
தாமிரத்தில் மிகப்பெரிய தண்ணி அண்டா
சிங்கரா மாப்பிள்ளைக்கு சோறே டுக்க
 தெளிவான டிபன்பாக்ஸ்ம் , சேர்த்து வைத்தார்

முக்காலி , தீவட்டி, அண்டா தட்டு
முளைப்பாரி ,சருவங்கள் எட்டு , மேலும்
எக்காலும் தண்ணீரைத் தூக்கி வந்து
இயல்பாக வைத்திருக்க குடங்கள் பத்து
தக்காளிப் பழநிறத்துப் பெண்ணுக் காக
தங்கம்போல் மின்னலிட  வெங்கலத்தில்
சொக்கவைக்கும் சாமான்கள் நிறையச் சேர்த்தார் !
தொழிலகம் போல் வீட்டிற்குள் அடுக்கிவைத்தார் !

Friday, 2 August 2013

செட்டிநாட்டு நகைகள் ஒருதொகுப்பு




நமது செட்டிநாட்டு பகுதிகளில் நாம் பயன்படுத்து சில நகைகளின் பெயர்களும் அதை பற்றியும் இங்கு நாம் பார்போம் . வைர நகைகளும் தங்க நகைகளும் நமவர்களில் இருபாலரும் அணியகுடியவையே .
முதலில் நம் ஆண்கள் அணியும் நகைகளை பற்றி பார்போம்

அரும்புதடை - மோதிரம்

சங்கிலி

குருமாத்து - கைசங்கிலி

கால்மோதிரம் - ஆண்கள் அணியும் மிஞ்சி ( மெட்டி )

தண்டை - காலில் அணியப்படும் வெள்ளியால் செய்த ஒருவித வளையம்

கௌரி சங்கம் - கௌரி சங்கம் என்பது ஒரு உருத்திராட்ச மாலையாகும். இந்த கௌரிசங்கத்தில் உருத்திராட்சங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் இணைப்புகள், தொங்கட்டான் (பெண்டன்ட்) போன்றவை தங்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்தத் தொங்கட்டானில் ரிசபாருடர் எனும் ரிசப வாகனத்தில் சிவசக்தி சமேதராக அமர்ந்திருக்கும் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும்

நட்சத்திர தோடு - இது சிறு பிள்ளை களுக்கு அணிவிகபடும் நகை ஆகும் . எதில் சில்லர் வைரக் கற்கள் அல்லது வெள்ளை பூகற்கள் பதித்து வைத்திருப்பர் . இது ஆண் / பெண் இரு குழந்தைகளுக்கும் அணியபெரும் நகையாகும்





நமது ஆச்சிகள் பயன்படுத்து / பயன்படுத்திய சில நகைகளின் பெயர்களை அதை பற்றியும் இங்கு பார்போம்.

கழுத்திரு - இது செட்டிநாட்டு அணிகலன்களுள் ஒன்றாகும். நகரத்தார் தாலி என்றும் அழைக்கப்படுகிறது. திருமணம் அல்லது சாந்திக் கல்யாண (சஷ்டியப்த பூர்த்தி) நாளன்று மணமகனால் மணமகளுக்கு அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன் ஆகும்.

கண்டசரம் - வைரகற்கள் பதிக்கப்பட்ட கழுத்தை ஒட்டி அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன் .

மங்களச்சரம் - தாலி மற்றும் தாலி சங்கிலி முழுவதும் வைரகற்கள் பதிக்கப்பட்ட ஒரு வகை அணிகலன் .

பூச்சரம் - இது பூ வேலைப்பாடுகலுடன் கூடிய தங்கச்சங்கிலி முழுவதும் வைரகற்கள் பதிக்கப்பட்ட ஒரு வகை அணிகலன் .

முத்து மாலை - இது தங்கச்சங்கிலியில் முழுவதும் உயர்ரக முத்துகலால் கோர்க்கபட்ட மாலை . இது ஒரு வகை கழுத்து அணிகலன் .

பாசிமாலை - இது தங்கச்சங்கிலியில் கருகுமணி என்று அழைக்கப்படும் பாசி மணிகளால் கோர்க்கபட்ட மாலை . இது ஒரு வகை கழுத்து அணிகலன் .

வைரக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையலின் வெளிப் பகுதிகளில் வைரக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட ஒரு வகையான கையில் அணியகுடிய அணிகலன் .

நெளிகாப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் நெளி நெளி யாக வளைந்து காணப்படும் . இது சாதாரணமாக வீட்டில் உள்ளபோது அணிந்து கொள்ளப்படும் நகைகளில் ஒன்று .

கல்லுக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் வண்ணக்கற்கள் பதிகபட்டிருகும் .ஒரு வகையான கையில் அணியகுடிய அணிகலன் . ( நீலகல்லுக்காப்பு , சிவப்புகல்லுக்காப்பு , பச்சைகல்லுக்காப்பு )

முத்துக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் உயர்ரக முத்து பதிகபட்டிருகும் .

பாசிக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் கருகுமணி என்று அழைக்கப்படும் பாசி பதிகபட்டிருகும் .

வைரத்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் முழுவது வைரக்கற்கள் பதிகபட்டிருகும் . ( இதில் ஏழு கல்லு , பதிமுனு கல்லு பதித்தது என்று கணக்குகள் உள்ளன )

வெள்ளகல்லு தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் வெள்ளை கற்கள் பதிகபடிருகும் . இது சாதரணமாக வீட்டில் உள்ளபோது அணியப்படும் நகையாகும்

பாசித்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் இடையில் கருகுமணி பதிகபட்டிருகும் . இதுவும் சாதரணமாக வீட்டில் உள்ளபோது அணியப்படும் நகையாகும்


முத்துத்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் இடையில் உயர்ரக முத்து பதிகபட்டிருகும் .

முத்துமோதிரம் / முத்து அரும்புதடை - தங்கத்தால் ஆன அரும்புதடையில் முத்து பதிக்கபட்டிருகும் .

அரும்புதடை - வைரவேட்டு வரிகள் அல்லது பூ நெளிகள் கொண்டு செய்யபட்டிருக்கும் . இதில் யனை முடி பதிக்க பட்டிருக்கும் . இரண்டு வரி அமைப்புகள் கொண்டிருக்கும் . இது கை விரல்களில் அணியப்படும் ஆபரணம் ஆகும் .

மிஞ்சி - இது வெள்ளியால் செய்த ஆபரணம் ஆகும்
( மெட்டி ). கால் விரல்களில் அணியகுடிய ஒன்று . இதில் ஒரு தனி சிறப்பு என்னவென்றால் நம் ஆச்சிகள் மட்டும் கால் விரல்களில் மூன்று வலயங்கள் அணிதிருபர்கள்

இரட்டவடசங்கிலி - இது இரண்டு சங்கிலிகள் ஒன்றோடு ஒன்று சிறிது இடைவெளி விட்டு பினைகபட்டிருக்கு இதில் தாலியை கோர்த்து அணிவர்

ஒற்றை வட சங்கிலி - இது சாதாரணமான தங்க சங்கில்லியாகும் . எதில் தாலியை கோர்த்து அணிவர்

மாங்கா மாலை - இது தங்கத்தால் செய்யப்பட்ட ஒன்று . இது மங்காய் வடிவில் சிறிதாக இருக்கும் . சங்கிலியின் இடையில் சிறு மாங்காய் வடிவ அமைப்புகள் கொர்கபட்டிருகும்


முற்காலத்தில் நமது ஆச்சிகள் தலையில் குத்தும் கொண்டை உசி , உக்கு , சேலையில் குத்த கூடிய உக்குகள் கூட தங்கத்தில் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

. நமது வழக்கத்தில் கட்டயமாக பெண் பிள்ளைக்கு திருமணத்தின் பொது கட்டாயமாக வைரைத் தோடும் அதற்கு மாற்று தோடும் தருவர் .அதே போன்று மணமகனுக்கு வைர மோதிரமுன் வழங்குவது கட்டயமாக உள்ளது . இதை நகைகளில் கணக்கு எடுத்தது கொள்ளபடமார்கள்

ஒருநகை என்றால் பெண்ணுக்கு கன்டசரம் மட்டு கொடுப்பார்கள்

இரண்டு நகை என்றால் பெண்ணுக்கு கன்டசரமும் வைரக்காப்பும் தருவார்கள் அல்லது பூச்சரமும் கன்டசரமும் தருவார்கள் ( கன்டசரம், பூச்சரம் , வைரக்காப்பு , மங்களச்சரம் இவைகளில் எதேனும் இரண்டு தருவார்கள் )

முன்று நகை என்றால் பெண்ணுக்கு கன்டசரம் ,மங்களச்சரம் வைரக்காப்பும் தருவார்கள் அல்லது (கன்டசரம், பூச்சரம் , வைரக்காப்பு , மங்களச்சரம் இவைகளில் எதேனும் மூன்றை தருவார்கள் )

இந்தியாவில் வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களில் 40% செட்டிநாடு பகுதியை சார்ந்தவர்கள் . பொதுவாக 5 சென்ட் வைரங்களை சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் போன்ற பல்வேறு பகுதி மக்கள் வாங்குகின்றனர் .ஆனால் செட்டிநாடு பகுதி மக்கள் குறைந்தபட்ச 25 சென்டுகள் வைரைத்தை அணிய பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடதக்கது .